search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தீக்குளிப்பு"

    வாழப்பாடி அருகே கணவர் மது குடித்து செலவழித்து வந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.

    அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தச்சு தொழிலில் கிடைக்கும் பணத்தை வீட்டில் குடும்ப செலவுக்கு சரிவர கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பரமேஸ்வரி அவரை கண்டித்தார். வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குகூட பணம் தராமல் இப்படி மது குடித்து வந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது என கூறி சத்தம் போட்டார்.

    இதனால் நேற்றும் இருவருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பரமேஸ்வரி, இனிமேல் கணவருடன் வாழ்வதைவிட, சாவதே மேல் என முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவி எரிந்தது. இதனால் வலியால் பரமேஸ்வரி சத்தம் போட்டப்படி அங்கும், இங்குமாக ஓடினார். அவரது அலறலை கேட்ட, அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக பரமேஸ்வரியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமேஸ்வரிக்கு முகம், தலை, கை, கால் உள்ளிட்ட இடங்கள் தீயில் கருகியது. உயிருக்கு ஆபத்ததான நிலையில் உள்ள அவருக்கு தீ காயம் பிரிவில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்தார். இந்த சம்பவம் குறித்து 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூர் என்.சி. காலனியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (20). வீரபாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு வரதட்சணை கேட்டு முகேசின் தாய், தந்தை கிருஷ்ண வேணியை கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

    தாய் வீட்டில் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் பணம் வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து முகேசிடம் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். முகேசும் பணம் வாங்கி வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என கூறியுள்ளார்.

    காதல் கணவரும் தன்னிடம் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த கிருஷ்ணவேணி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைத்து கிருஷ்ணவேணியை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் முகேஷ் மற்றும் அவரது தாய், தந்தை மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×